இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை
மாநகரத்துடன், நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் இணைக்கப்பட்டு, சென்னை
மாநகரம் பெரும் நகரமாக உருமாறியுள்ளது. இதன் காரணமாக உட்கட்டமைப்பு
வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு,
குடிநீர் வழங்கல், கழிவுநீர் வடிகால் சுகாதாரப் பணிகள், மழைநீர் வடிகால்,
திடக்கழிவு மேலாண்மை, சாலை வசதிகள், தெரு விளக்குகள், போக்குவரத்து
நிலையங்கள், வாகன நிறுத்தங்கள் என பல்வேறு பணிகளை செயல்படுத்தி, சென்னை
நகரை நாட்டிலேயே ஒரு முதன்மை நகரமாக உருவாக்கிட சென்னை பெருநகர் வளர்ச்சித்
திட்டம் என்ற மகத்தான திட்டத்தினை அறிவித்ததுடன், இத்திட்டத்தினை
செயல்படுத்திட 20112012 ஆம் ஆண்டிற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
செய்து முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டார்.
இந்த
ஒதுக்கீட்டில், சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில்
உள்ள 175.36 கி.மீ. நீளமுள்ள 360 சாலைகள், மழைநீர் வடிகால், நடைபாதை,
கம்பிவடம் கொண்டு செல்லும் பாதாளக் குழாய்கள், தெரு விளக்குகள் மற்றும்
தெருகலன்கள் முதலிய வசதிகளை மேம்படுத்த 333.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், கழிவுநீரேற்று நிலை
யங்களுக்கிடையே விசைக் குழாய்கள் பதித்தல், குடிநீர் வழங்குவதற்காக
குடிநீர் குழாய் அமைப்புகளை நிறுவுதல், அடைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள
இரும்பு மற்றும் பி.வி.சி. குடிநீர் குழாய்களை மாற்றி புதிதாக அமைத்தல், 35
ஜெட்ராடிங் எந்திரங்களையும், 50 தூர்வாரும் எந்திரங்களையும் வாங்குதல்,
கழிவு நீர்க்குழாய்களின் விட்டத்தை அதிகரித்தல் போன்ற திட்டங்களை சென்னை
பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மூலம்
189.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர,சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தின்
கீழ் 20122013 ஆம் ஆண்டில், சென்னை நகரில் தற்போதுள்ள வசதிகளைப்
மேம்படுத்தும் விதமாக, 366.23 கோடி மதிப்பீட்டில் 280.83 கிலோ மீட்டர்
நீளமுள்ள 1,189 சாலைகள், மழைநீர் வடிகால்கள், கம்பிவட பாதாளக் குழாய்கள்,
தெரு விளக்குகள், நடைபாதை மற்றும் தெருக்கலன்களுடன் ஒருங்கிணைந்த
வளர்ச்சியை பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளவும் முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சென்னை நகரின் பழைய பகுதிகளைப் போலவே,
புதிய இணைந்த பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையை சிறப்புடன் செயல்படுத்த,
குப்பையை அமுக்கி எடுத்துச் செல்லும் பெரிய மற்றும் சிறிய காம்பாக்டர்
வாகனங்கள், அதிக கொள்ளளவு கொண்ட ஹாலோ டிப்பர் வாகனங்கள், அகழ்தல் மற்றும்
பற்றுதலுடன் கூடிய ஹைட்ராலிக் வாகனங்கள், கனரக டிப்பர் வாகனங்கள், முன்
மற்றும் பின் பளு தூக்கிகள், சிறிய வகை வழுக்கும் தன்மையுடைய பளு தூக்கிகள்
மற்றும் பெரிய வகை இயந்திர குப்பை வாகனங்கள் ஆகிய 180 நவீன இயந்திரங்கள்
42.08 கோடி செலவில் வாங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தற்பொழுதுள்ள
7 குப்பை மாற்று நிலையங்களுடன் கூடுதலாக 6 குப்பை மாற்று நிலையங்களை 18.70
கோடி ரூபாய் செலவில் துவக்குவதற்கும் முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
சென்னை நகரப் பகுதிகளுடன், புதியதாக இணைந்த
பகுதிகளையும் சேர்த்து, சென்னை நகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி
தேவையான குடிநீர் வழங்குவதற்காக, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல்
மற்றும் கழிவு நீரகற்று வாரியம் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி
விரிவான திட்ட அறிக்கை ஒன்றை உருவாக்கியுள்ளது.
இதன் அடிப்படையில்,
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால்
மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்களுக்கு 452.77 கோடி ரூபாய் அளவிற்கு
ஒப்புதல் வழங்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில்
சென்னை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளான நொளம்பூர், காரம்பாக்கம்,
ராமாபுரம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம்,
ஈஞ்சம்பாக்கம் சோழிங்கநல்லூர் மற்றும் காரப்பாக்கம் ஆகிய பகுதிகளில்
192.02 கோடி ரூபாய் செலவில் விரிவான குடிநீர் திட்டங்கள்
செயல்படுத்தப்படும்.
மேலும், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட
கத்திவாக்கம், ராமாபுரம், சோழிங்கநல்லூர் மற்றும் காரப்பாக்கம் பகுதிகளில்
245.55 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
கழிவுநீர் மேலாண்மைக்காக 15.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 66 தூர்வாரும்
இயந்திரங்கள், கழிவுநீர் மற்றும் கசடுகளை உறிஞ்சும் நடமாடும் இயந்திரங்கள்,
20 குழாய் சுத்தப்படுத்தி உறிஞ்சும் இயந்திரங்கள் ஆகிய நவீனவகை
இயந்திரங்கள் வாங்கப்படும்.
எனவே, மொத்தத்தில், 20122013 ஆம் ஆண்டில்
சென்னை பெருநகர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி மற்றும்
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம்
879.78 கோடி ரூபாய் மதிப்புடைய திட்டங்களை செயல்படுத்த ஜெயலலிதா ஒப்புதல்
வழங்கியுள்ளார். இத்திட்டங்களுக்கு அரசு மானியமாக 500 கோடி ரூபாய்
வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சி மூலம் நிறைவேற்றப்படவிருக்கும்
பல்வேறு நகர மேம்பாட்டுத் திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்கினால் மட்டும்
போதாது என்றும், அந்த திட்டங்களை நிறைவேற்றி, அதன் பயன்களை மக்களிடம்
கொண்டு செல்வதற்கு உரிய பணியாளர்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை கருத்தில்
கொண்டு, ஜெயலலிதா சென்னை மாநகராட்சிக்கு கூடுதலாக தலைமைப் பொறியாளர் பதவி
உள்பட 784 புதிய பணியிடங்களை தோற்றுவிப்பதற்கும், நீண்ட காலமாக
நிரப்பப்படாமல் காலியாக உள்ள 2,405 பணியிடங்களை நிரப்புவதற்கும்
உத்தரவிட்டுள்ளார்கள்.
அரசின் இந்த திட்டங்கள் மூலம், சென்னை மாநகர
மக்கள் அனைவரும் தரமான சாலை வசதிகள், குடிநீர் வசதி, கழிவுநீரகற்றும் வசதி,
திடக்கழிவு மேலாண்மை வசதிகள் போன்ற அனைத்து அடிப்படை கட்டமைப்பு
வசதிகளையும் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
Comments