சென்னை: சென்னை, வேலூரைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
டெங்கு
காய்ச்சலுக்கு சென்னையில் இருவரும் வேலூரில் ஒரு சிறுமியும்
உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் திருச்சி, மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு
2 வயது ஆண் குழந்தை உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.
திருச்சி
மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த பிரபாகரனின் 2 வயது குழந்தை ராமஜெயம்,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, கீரமங்கலம் பகுதியைச்
சேர்ந்தவர் ராஜகோபால் ஆகியோர் உயிரிழந்திருக்கின்றனர். ராஜகோபால் திருச்சி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகரை சேர்ந்த ஒருவரும் டெங்கு
காய்ச்சலால் உயிரிழந்திருக்கிறார்.
Comments