பெண்களுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட டாப்-5 கார்கள்

பெண்களின் டிரைவிங் ஸ்டைலில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இருக்கையில் அமர்ந்தால் சாலை தெளிவாக தெரிய வேண்டும் என்பதும் மிக முக்கியமான விஷயம். குறைந்த பராமரிப்பு செலவு, எரிபொருள் சிக்கனம், பட்ஜெட் விலை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மனதில் வைத்தே பெரும்பாலான பெண்கள் கார் வாங்க வருகின்றனர். அந்த வகையில், பட்ஜெட் விலை மற்றும் இந்திய பெண்களின் சராசரி உயரத்திற்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட கார்களின் தொகுப்பை காணலாம்.


டாடா நானோ

ரூ.1.75 லட்சம் முதல் ரூ.2.10 லட்சம் விலையில் கிடைக்கிறது. லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜ் செல்வதாக அராய் சான்றளித்துள்ளது. 4 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டது. 3099 மிமீ நீளம் கொண்ட கார் என்பதால் பார்க்கிங் மற்றும் போக்குவரத்து நெரிசலில் செல்வது எளிது. ஏசி உள்ளிட்ட இன்னும் பிற வசதிகளுடன் கிடைக்கிறது.

மாருதி ஆல்ட்டோ 800

அதிக எதிர்பார்ப்பை ஏற்படு்ததியிருக்கும் மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 கார் ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் ஆன்ரோடு விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிட்டருக்கு 22.74 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது.இதுவும் குட்டிக் கார் என்பதால் பார்க்கிங் செய்வது எளிது. ஏசி, டிரைவர் சைடு ஏர்பேக் உள்ளிட்ட ஏராளமான வசதிகளுடன் வருகிறது.

ஹூண்டாய் இயான்

புதிய புளூயிடிக் டிசைன் நிச்சயமாக குறிப்பிட்டு கூறலாம். ரூ.3.3 லட்சம் முதல் ரூ.4.2 லட்சம் விலையில் கிடைக்கிறது. லிட்டருக்கு 21.1 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று குறிப்பிடுகிறது. அதிக வசதிகள், தரமான பாகங்கள், கவர்ச்சியான உள்ளலங்காரம் ஆகியவை இயான் ப்ளஸ் பாயிண்ட்களாக கூறலாம்.

செவர்லே ஸ்பார்க்

என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார்கள் என்றாலும் கொஞ்சம் பெரிய கார் தோற்றத்தை கொண்டிருக்கிறது. ரூ.3.4 லட்சம் விலை முதல் கிடைக்கிறது. லிட்டருக்கு 18.0 கிமீ மைலேஜ் செல்வதாக அராய் சான்று குறிப்பிடுகிறது. அதிக வசதிகள், கவர்ச்சியான உட்புறம் என்பது ஸ்பாக்கின் கூடுதல் பலம். இருபாலரும் ஓட்டுவதற்கு ஏற்ற கார் என்பதால் ஒரு மனதோடு வாங்கலாம்.

செவர்லே பீட்

என்னங்க, வெறும் பெட்ரோல் மட்டும்தானா எனும் பெண்களுக்கு இருக்கும் டீசல் சாய்ஸ் செவர்லே பீட். குறைந்த விலை டீசல் கார் என்பதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையும் பீட்டுக்கு உண்டு. ஸ்டைலான வடிவமைப்பு, வசதிகள் என கவரும் அம்சங்கள் ஏராளம். லிட்டருக்கு 25.44 கிமீ செல்வதாக அராய் சான்றளித்துள்ளது. ரூ.4.53 லட்சம் முதல் கிடைக்கிறது.

Comments