'ஒன்இந்தியா'வுக்கு டிலாய்ட்டி டெக்னாலஜி பாஸ்ட் 50 விருது!

 Oneindia Wins Deloitte Technology Fast 50 India 2012 பெங்களூர்: பெங்களூரில் நடந்த எழில்மிகு நிகழ்ச்சியில், ஒன்இந்தியா இணையதளத்திற்கு டிலாய்ட்டி டெக்னாலஜி பாஸ்ட் 50 இந்தியா 2012 விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை டிலாய்ட்டி டச் தோமட்சு வழங்கியுள்ளது.
கிரேனியம் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவது ஒன்இந்தியா.இன் இணையதளம் ஆகும். இதுதவிர கிளிக்.இன் மற்றும் பல்வேறு இணையதளங்களையும் கிரேனியம் நிர்வகித்து வருகிறது.

கடந்த 3 நிதியாண்டுகளில் நிறுவனங்களின் வருவாய் ரீதியான வளர்ச்சியைக் கண்காணித்து அதைப் பரிசீலித்து விருதுக்குரியவர்களை நடுவர்கள் தேர்ந்தெடுத்தனர். மொத்தம் 50 பேருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அதில் 9 நிறுவனங்கள் இணையதளத் துறையைச் சேர்ந்தவை.
இதுகுறித்து ஒன்இந்தியா.இன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.ஜி.மகேஷ் கூறுகையில், ஒன்இந்தியா இணையதளம் சீரான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. எங்களது பிராந்திய மொழி இணையங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியே எங்களுக்குக் கிடைத்த இந்த மிகப் பெரிய அங்கீகாரத்திற்குக் கிடைத்த முக்கிய காரணம். சமீபத்தில்தான் எங்களது 6வது பிராந்திய மொழி தளத்தை, குஜராத்தியில் தொடங்கினோம்.
இந்த விருது கிரேனியம் குழுமத்திற்கும், ஒன்இந்தியாவுக்கும் கிடைத்த வரவேற்புக்குரிய அங்கீகாரம். இருப்பினும் மற்ற 49 வெற்றியாளர்களுடன் ஒப்பிடுகையில் நாங்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்பதை உணர்கிறோம். மற்றவர்கள் மிகப் பெரிய வருவாயை ஈட்டும்போது அதேபோல எங்களாலும் செய்ய முடியும் என்று நம்புகிறேன் என்றார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான பானீஷ் மூர்த்தி பேசுகையில், வெற்றி பெற்றவர்கள் மேலும் மேலும் உயர உயர்ந்த குறிக்கோள்களை வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

Comments