இன்னும் 45 வருடமானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியாது: மணிசங்கர் அய்யர்

 I Am Jurassic Park Congressman Mani Shankar Aiyar ஊட்டி: இன்னும் 45 வருடமானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று உண்மையைப் பேசினால் மூத்த காங்கிரஸ் தலைவரான மணிசங்கர் அய்யர்.
ஊட்டி குட்ஷெப்பர்ட் பள்ளி நிறுவனர் தின விழாவில் கலந்து கொள்ள வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
நாடாளுமன்றத்துக்கு இப்போதைக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பில்லை.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 45
வருடமாகின்றது. இன்னும் 45 வருடமானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாது. காங்கிரஸில் எல்லோருமே தலைவர்கள். அதுதான் கட்சியில் இருக்கும் முக்கியப் பிரச்னையே.
கூடங்குளம் விவகாரத்தில் உதயகுமாருக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. இதில், மின்சாரத்தை விட மக்களின் பாதுகாப்பே முக்கியம்.
அரவிந்த் கேஜ்ரிவால் தற்போது நடத்திக் கொண்டிருப்பது முழுக்க முழுக்க நாடகம். கெஜ்ரிவால் பாஜகவின் கைப்பாவை.
இப்போது ராகுல் அரசியலுக்கு வருவது அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திரா, ராஜீவ் ஆகியோர் அரசியலுக்கு வந்தபோது யாருக்கும் அவர்களின் செயல்பாடுகள் குறித்துத் தெரியாது. அதேபோல் ராகுலும் வந்தால் மிகச் சிறப்பாக வழி நடத்துவார் என்றார் அய்யர்.
நான் ஒரு ஜூராசிக் பார்க் காங்கிரஸ்காரன்:
இரு தினங்களுக்கு முன் டெல்லியில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அய்யர் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், என்னை காங்கிரஸ் ஒரு தடைக்கல்லாக நினைக்கிறது. எனது யோசனைகளை கட்சி ஏற்பதில்லை. குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவு மிக மிக அவசியம். இதைச் சொன்னால் ஏற்க மறுக்கிறார்கள்.
கட்சி என்னை சீரியஸாக எடுத்துக் கொண்டிருந்தால் நான் இப்போது அமைச்சராக இருந்திருப்பேன். ஆனால், என்னை குப்பையான நினைத்து தொட்டியில் போட்டுவிட்டனர். அடிப்படையில் மதவாதத்தை மிகக் கடுமையான எதிர்க்கும் நான் இப்போது ஒரு ஜூராசிக் பார்க் காங்கிரஸ்காரனாகவே உள்ளேன் என்றார்.
உங்களுக்குத் தான் ராஜ்யசா எம்பி பதவி தந்திருக்கிறார்களே, அதை வைத்து இந்திய-பாகிஸ்தான் உறவுக்கு பாடுபடலாமே என்று கேட்டதற்கு, நாடாளுமன்றத்தில் எங்கே எதையும் உருப்படியாக விவாதிக்கிறார்கள். ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தால் தானே இந்தியா-பாகிஸ்தான் விவகாரம் குறித்தே பேசுகின்றனர் என்றார்.

Comments