டெல்லி: உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட டாப் செல்போன்
நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் பார்தி ஏர்டெல்லுக்கு 4 வது இடம்
கிடைத்திருக்கிறது!
உலக அளவில் சீனா மொபைல் தொடர்ந்தும் முதலிடத்தில்
இருந்து வருகிறது. மொத்தம் 683.08 மில்லியன் வாடிக்கையாளர்களைக்
கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். 2வது இடத்தில் வோடஃபோன் நிறுவனம் 386.88
மில்லியன் வாடிக்கையாளர்களையும்
3-வது இடத்தில் அமெரிக்காவின் மொவில்
குழுமம் 251.83 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்டிருக்கிறது. பார்தி
ஏர்டெல் 250 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு 4-வது இடத்தைப்
பிடித்திருக்கிறது! இந்தத் தகவல்களை ஒயர்லெஸ் இண்டெலிஜென்ஸ் நிறுவனம்
வெளியிட்டிருக்கிறது.
இதர இந்திய மொபைல் நிறுவனங்களான ரிலையன்ஸ்
8-வதுஇடத்திலும் ஐடியா செல்லுலார் நிறுவனம் 14-வது இடத்திலும் பொதுத்துறை
நிறுவனமான பி.எஸ்.என்.எல்.20வது இடத்திலும் இருக்கிறது.
Comments