பெண்களை மோசமாக
சித்திரிப்பது, ஆபாசமாக காட்டுவது, இழிவுப்படுத்தும் வகையில் நடத்துவது
போன்ற குற்றங்களுக்கு கடந்த 1986ம் ஆண்டு தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.2
ஆயிரம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு வந்தது.
ஆனால்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. தற்போது
செல்போன்கள் மற்றும் இணையதளம் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு ஆபாசமான எம்.எம்.எஸ் மற்றும் இமெயில்
அனுப்புதல் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை கடுமையாக்க, பெண்கள் மற்றும்
குழந்தைகள் நல அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான மத்திய
சட்ட அமைச்சரகத்திற்கு பல்வேறு பரிந்துரைகளை, பெண்கள் நல அமைச்சரகம்
அனுப்பியுள்ளது.
இதன்படி பெண்களுக்கு ஆபாச எம்.எம்.எஸ், இமெயில்
அனுப்புவோருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும், 3 ஆண்டு
சிறை தண்டனையும் வழங்க வேண்டும். பொது இடத்தில் பெண்களை இழிவுப்படுத்தும்
வகையில் அவர்களின் உடல்பகுதியோ, கேலி சித்திரமே வெளியிடுவோருக்கு கடும்
தண்டனை அளிக்க வேண்டும்.
அதேபோல பத்திரிக்கை துறை மற்றும் விளம்பர
துறையை சேர்ந்தவர்களும், பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் படங்களை
வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை குறித்து மத்திய அமைச்சரவை
இன்று பரிசீலனை செய்ய உள்ளதாக தெரிகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல
அமைச்சரகம் அளித்துள்ள பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று கொண்டால், இது
தொடர்பான சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
Comments