அருணகிரிநாதருக்கு இதே வேலைதான்..வெளியேற்றப்பட்ட 2வது இளைய ஆதீனம் நித்தியானந்தா

 Madurai Aadheenam Mutt Sacks 2nd Times மதுரை: மதுரை ஆதீன மடத்துக்கு இளைய ஆதீனம் ஒருவரை நியமிப்பதும் பின்னர் அவரை நீக்குவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் அருணகிரிநாதர்.
2004-ம் ஆண்டு 16வயது சிறுவன் சுவாமிநாதனை தமது இளைய ஆதீனமாக அறிவித்தார் அருணகிரிநாதர். அப்போது சுவாமிநாதன் 11-ம் வகுப்பு படித்து வந்தார். ஆனால் ஒரே ஒரு மாதம் சுவாமிநாதன் அப்பதவியில் நீடித்தார். ஒரு மாதம் கழித்து அருணகிரிநாதர் அவர் சரியில்லை என்று கூறி விரட்டியடித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்தியானந்தா, இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட போதும் இந்த கதைதான் பேசப்பட்டது. ஆனால் அருணகிரிநாதரோ அப்படியெல்லாம் இல்லை.. நித்தியானந்தா மட்டுமே, ‘கண்டதும் கொண்டதும்' ஆன ஒரே இளைய சந்நிதானம் என்று அறிவித்திருந்தார்.
தற்போது இருப்புக்கே ஆப்பு என்கிற நிலையில் மடமே கைவிட்டுப் போய்விடும் என்ற நிலையில் வேறு வழியே இல்லாமல் மீண்டும் வெற்றிகரமாக இளைய ஆதீனத்தை விரட்டியடித்திருக்கிறார் அருணகிரிநாதர்.
அனேகமாக இனி கனவிலும் இளைய ஆதீனத்தை நியமிக்கனும் என்கிற எண்ணமே அருணகிரிநாதருக்கு வராது என்றே கூறப்படுகிறது.

Comments