ரூ. 20,000 கொடுத்து கன்னத்தில் அறை வாங்கிக்குங்க.. இளமை திரும்பிடுமாம்!

 Face Slap Beauty Treatment Make You Young சான்பிரான்சிஸ்கோ: பழங்களைக் கொண்டு முகத்திற்கு பேஸ்பேக் போடலாம், காய்கறிகளைக் கொண்டும் போடலாம், ஏன் ஒயினை வைத்து கூட முகத்திற்கு அழகு சிகிச்சை செய்கின்றனர். ஆனால் அறைவதன் மூலம் முகத்தை அழகாக மாற்ற முடியும் என்கின்றனர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அழகியல் நிபுணர்கள்.
இந்த கன்னத்தில் அறையும் அழகு சிகிச்சை மையத்தை நடத்தி வருபவர் அகா டாடா. தாய்லாந்தை சேர்ந்த இவர், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருடைய
அழகு நிலையத்தின் ஸ்பெசல் கன்னத்தில் அறைவதுதான். இதற்கு கட்டணமாக 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார்.
மெல்லியதாய் கசியும் இசையை ஒலிக்கவிட்டு அதே ரிதமில் சிகிச்சைக்கு வரும் பெண்களின் கண்ணங்களில் தட்டுகிறார் அழகு நிலையத்தை நடத்துபவர்.இந்த அழகு நிலையம் முதலில் பாங்காக் நகரில்தான் தொடங்கப்பட்டது. தினசரி ஒருடஜனுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து இவரிடம் கன்னத்தில் அறைவாங்கிக் கொண்டு (முகத்தை அழகு படுத்திக்கொண்டு) செல்வார்களாம்.
இது எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. ரசாயனகலவை எதையும் முகத்திற்கு பூசுவதில்லை. ஜஸ்ட் சில செல்லத்தட்டுக்கள்தான் என்கிறார் அழகு நிலையத்தை நடத்தும் அகா டாடா.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை இந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டால் முகத்தில் சுருக்கம் நீங்கி இளமை ஊஞ்சலாடும் என்று உத்தரவாதமும் தருகிறார். கன்னத்தில் தட்டும்போது சத்தம்தான் வருமாம், வலிக்காதாம்.
இதுக்கு எதுக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்யனும். நம்ம ஊர் பெண்மணிகள் அவர்களின் கணவரின் கையால் தினசரி இரண்டு தட்டு வாங்கினால் அழகு மிளிராதா என்ன? என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது!.

Comments