நாட்டின் 2 பெரிய மனிதர்களை அக். 6ல் அம்பலப்படுத்துவோம்- கேஜ்ரிவால்

 We Will Expose Two Very Powerful People Of Country டெல்லி: நாட்டின் இரண்டு பெரிய முக்கியப் புள்ளிகளை அக்டோபர் 6ம் தேதி மக்கள் முன்பு அம்பலப்படுத்துவோம் என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவாலும், அவரது சகாக்களும் இன்று அரசியலில் குதித்தனர்.
அரசியலில் குதித்த பின்னர் கூடியிருந்த தனது ஆதரவாளர்களிடையே கேஜ்ரிவால் பேசுகையில், இது உங்கள் கட்சி, என்னுடைய கட்சி அல்ல.

எங்களது கட்சி எம்.பிக்கள், எம்.எல்ஏக்கள் உள்ளிட்ட யாருமே அரசு வீடு, வாகனம், பாதுகாப்பை ஏற்க மாட்டார்கள். காரில் சிவப்பு விளக்கைப் போட்டுக் கொள்ள மாட்டார்கள் என்றார் கேஜ்ரிவால்.
நாட்டின் இரண்டு பெரிய மனிதர்களை அக்டோபர் 6ம் தேதி மாலை 3 மணிக்கு மக்கள் முன்பு அம்பலப்படுத்துவோம் என்றார். கேஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அன்னா ஹஸாரே போடுவது போன்ற தொப்பியை கேஜ்ரிவாலும், அவரது ஆதரவாளர்களும் போட்டிருந்தது வித்தியாசமாக இருந்தது.

Comments