அடுத்த அதிரடி.. கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் ரூ11.42 அதிகரிப்பு: இனி விலை ரூ.921

 Cooking Gas Price Hiked Non Subsidised Cylinder டெல்லி: அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளால் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் மத்திய அரசு தற்போது கேஸ் சிலிண்டர் விலையையும் அதிகரித்துவிட்டது.
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாட்டை அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் திடீரென இன்று சிலிண்டர் விலையை உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு.
தற்போதைய விலையைவிட ரூ11.42 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வை நியாயப்படுத்தும் விதமாக, விநியோகஸ்தர்களுக்காக கமிஷன் உயர்த்தவே இந்த முடிவை மேற்கொண்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இதன் மூலம் மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ921 ஆக உயர்ந்திருக்கிறது.
மத்திய அரசுக்கு எதிராக எப்பொழுதெல்லாம் பெரும் புகார் எழுகிறதோ அப்போதெல்லாம் மக்களுக்கு அடி விழுகிறது. இந்த வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் மீது மோசடிப் புகார் எழுந்த நிலையில் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது மத்திய அரசு என்பதுதான் எதிர்க்கட்சிகளின் புகார்.

Comments