சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெற உள்ளதாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
தமிழக
சபாநாயகராக இருந்த டி. ஜெயக்குமார் திடீரென தமது பதவியை சில நாட்களுக்கு
முன்பு ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து சபாநாயகர் பொறுப்பு பி. தனாபால்
வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அக்.10-ல் தேர்தல்
இந்நிலையில்
இன்று தமிழக சட்டப்பேரவை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், வரும் 10-ந்
தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினமே சட்டப்
பேரவை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. 29-ந் தேதி வைர விழா கொண்டாட்டம்
நடைபெறுகிறது. பின்னர் 30-ந் தேதி முதல் சட்டப் பேரவைக் கூட்டம் தொடர்ந்து
நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர்
இதனிடையே
சபாநாயகர் தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தற்போதைய துணை
சபாநாயகர் ப. தனபாலை தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.
இதையடுத்து துணை சபாநாயகர் யார் என்ற விவாதம் எழுந்திருக்கிறது.
Comments