மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பவளவிழாவை
முன்னிட்டு 1986-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சார்பில் 7.47 லட்சம் ரூபாய்
செலவில், 50 அடி உயரத்தில் சென்னை அரும்பாக்கத்தில் அண்ணா நுழைவு வாயில் கட்டப்பட்டது.
இதனை அப்போதைய தமிழக முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார்.
தற்போது
இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மேம்பாலம் அமைக்க
முடிவு செய்யப்பட்டது. இந்த மேம்பாலத்துக்காக 82 டன் எடை கொண்ட நுழைவு
வாயிலை இடிக்கவும் திட்டமிடப்பட்டது. கடந்த 1-ந் தேதி அண்ணா வளைவை
இடிக்கும் பணியும் தொடங்கியது. ஆனால் அண்ணா நுழைவு வளைவின் உறுதித் தன்மை
அதிகரித்திருந்தால் அகற்ற முடியவில்லை. இதையடுத்து பாலத்தின் பாதையை மாற்றி
அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஏற்கனவே
வளைவு இருந்த நிலைக்கு கொண்டுவரப்படும். அதுவரை கிரைன் வளைவை தாங்கி
நிற்கும். வளைவு குறித்து உறுதி தன்மை கிடைத்த உடன் கிரைன்
அப்புறப்படுத்தப்பட இருக்கிறது..
Comments