அடுத்த ஆண்டில் இந்தியாவில் சில்லரை விற்பனை கடைகள்: வால்மார்ட் அறிவிப்பு

Walmart Aims First Retail Store India In 18 Months நியூயார்க்: இந்தியாவில் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் சில்லரை விற்பனைக் கடைகளைத் திறக்கப் போவதாக அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வால்மார்ட் நிறுவனத்தின் ஆசிய பிரிவு தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்காட் பிரைஸ் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் 12 முதல் 18 மாதங்களுக்குள் எமது நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்கி விடுவோம். இந்தியாவில் எங்கெங்கு, எத்தனை கடைகள் திறப்பது என்பது குறித்து இன்னும் நாங்கள் முடிவு எடுக்கவில்லை. இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் பார்தி நிறுவனத்துடன் தற்போது இணைந்து நடத்தப்பட்டு வரும் கடைகள் தொடர்ந்து நீடிக்கும். சில்லறை வர்த்தகத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் நிரந்தரமானவை என நம்புகிறோம்.இந்தியாவின் வளமான வருங்காலத்திற்கு நாங்கள் சேவை புரிவோம் என்றார் அவர்.

Comments