கருணாநிதிக்குதான் பாரத ரத்னா- ஜனாதிபதியிடம் திமுகவே விண்ணப்பித்த வினோதம்!

 Dmk Seeks Bharat Ratna Karunanidhi டெல்லி: திமுக தலைவரான கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று திமுகவே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பித்திருக்கிறது.

குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தில், 55 ஆண்டுகால பொதுவாழ்க்கை பங்களிப்புக்காக கருணாநிதிக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் இதுவரை பாரத ரத்னா விருது பெற்றுள்ளனர்.
தற்போது வினோதமாக திமுகவே அந்தக் கட்சியின் தலைவரான கருணாநிதியின் பெயரை அவருக்கு மிகவும் வேண்டியவரான குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பித்திருப்பது வினோதமாகவே பார்க்கபப்டுகிறது!

Comments