செல்போன் கட்டணங்கள் உயர்கின்றன.. முதல் 'போணி' ரிலையன்ஸ்

Reliance Hikes Mobile Call Rates 25 Pc மும்பை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் செல்போன் அழைப்புகளுக்கான கட்டணத்தை 25 விழுக்காடு அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து மற்ற செல்போன் நிறுவனங்களும் அழைப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தக் கூடும் எனத் தெரிகிறது.

ஒரு செகண்டுக்கு 1.2 பைசாவிலிருந்து 1.5 பைசாவாக 25 விழுக்காடு கட்டணத்தை உயர்த்தியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இந்த கட்டண உயர்வானது பீகார், குஜராத், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசச சர்க்கிளில் முதலில் நடைமுறைக்கு வந்துள்ளது. நாட்டின் இதர பகுதிகளில் அடுத்த 30 நாட்களுக்குள் புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போதைய கட்டணத்தால் உற்பத்தி செலவை சமாளிக்க முடியவில்லை என்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து மற்ற செல்போன் நிறுவனங்களும் கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடும் எனத் தெரிகிறது.

Comments