பொன்னேரில்
மின்வெட்டைக் கண்டித்து இன்று காலையில் போராட்டம் நடந்தது. இந்தப்
போராட்டத்தின் போது ஆத்திரத்திலும் வெறுப்பிலும் இருந்த பொதுமக்கள் சிலர்
அங்குள்ள மின்வாரியம் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்த மேசை,
நாற்காலிகளை தூக்கி எறிந்து தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தினர்.
இருப்பினும் ஆத்திரம் அடங்காததால் கண்ணில்பட்ட மின்வாரிய அதிகாரிகளையும்
அடித்து உதைத்து தாக்கியிருக்கின்றனர்.
இதனால் அலறிப்போன மின்வாரிய
அதிகாரிகளும் பணியாளர்களும் உயிர்தப்பினால் போதும் என்று ஓட்டம்
பிடித்தனர். மின்வெட்டுக்கான எதிர்வினை என்ன என்பது பொன்னேரியில்
தொடங்கியிருக்கிறது என்றே கூறப்படுகிறது.
Comments