செவ்வாய் கிரத்தில் நீரோடை இருந்த தடம்: கண்டுபிடித்தது கியூரியாசிட்டி

 curiosity rover finds evidence vigorous stream on mars வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் நீரோடை இருந்ததற்கான அடையாளமாக சரளை கற்கள் பாறை இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ள நாசா கியூரியாசிட்டி என்னும் விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் இறங்கி தனது ஆய்வைத் துவங்கியது. முன்னதாக அது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளங்கள் பதிந்த இடங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியது.


Marsஇந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் நீரோடை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நீரோடையால் அடித்துக் கொண்டு வரப்பட்ட சரளிக் கற்களின் பாறைகளை கியூரியாசிட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது. அந்த பாறைகளின் அளவு மற்றும் வடிவத்தை வைத்து பார்க்கையில் அவற்றை காற்று கொண்டு வந்து போட்டிருக்க முடியாது. நிச்சமயாக நீரோடை தான் அந்த கற்களை அடித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று கியூரியாசிட்டி விஞ்ஞானி ரெபக்கா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
Mars 
சில பாறைகள் உருண்டை வடிவத்தில் உள்ளன. அப்படி என்றால் அவை நீண்ட தூரம் அடித்து வரப்பட்டிருக்க வேண்டும் என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும் அங்கு ஒரு நீரோடையல்ல மாறாக பல்வேறு காலகட்டத்தில் பல நீரோடைகள் இருந்திருக்கின்றன என்று கூறப்படுகிறது.

Comments