கிரானைட் கொள்ளை வழக்கு: மு.க. அழகிரி மகனுக்கு முன்ஜாமீன் கிடைக்கலை!

 Court Denies Bail M K Alagiri S Son மதுரை: தமிழகத்தை உலுக்கிய கிரானைட் கொள்ளை வழக்கில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை மறுத்துவிட்டது.

தமிழக்த்தை உலுக்கிய கிரானைட் கொள்ளை வழக்கில் துரை தயாநிதி உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்துவிட்டு தலைமறைவாக இருந்தனர். துரை தயாநிதி டெல்லியில் பதுங்கியிருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துரைதயாநிதி உள்ளிட்ட பலரது முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நிராகரித்துவிட்டது. இதனால் துரை தயாநிதி மீதான பிடி இறுகி வருகிறது.

Comments