லண்டன்: இங்கிலாந்தில் தனது காதலரை 90 முறை கத்திரிக்கோல்களால்
சரமாரியாகக் குத்தி ஒரு பெண் கொலை செய்தார். பின்னர் தனது கழுத்தை
அறுத்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இங்கிலாந்தின் வடக்கு
ஸடபோர்ட்ஷயர் என்ற பகுதியில் இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. கொலை செய்த
பெண்ணின் பெயர் கரேன் கிளிம்ப்சன், 46 வயதாகிறது. இவரது காதலரின் பெயர்
மார்க் சான்ட்லர், 42 வயது. கரேனுக்கு முதல் திருமணம் மூலம் ஒரு குழந்தை
உள்ளது.
சாண்ட்லருடன் அவர் 18 வருடமாக சேர்ந்து வசித்து வந்தார்.
கடந்த
ஜனவரி மாதம் இருவரது உடல்களும் வீட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன.
இதையடுத்து விசாரணை தொடங்கியது. விசாரணையின் முடிவில் கரேன்தான்
சான்ட்லரைக் கொன்றுள்ளதாகவும், பின்னர் தற்கொலை செய்து கொண்டதாகவும்
தற்போது விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சான்ட்லருடன் ஏதோ
ஒரு காரணத்திற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் கரேன். அப்போது ஏற்பட்ட
ஆத்திரத்தில் கத்திரிக்கோல்களை எடுத்து சான்ட்லரை குத்தியுள்ளார். அவர்
தப்புவதற்காக மாடியிலிருந்து கீழே இறங்கி ஓடி வந்துள்ளார். ஆனால் விடாமல்
துரத்தி வந்த கரேன், சான்ட்லர் உடல் முழுவதிலும் கத்திரிக்கோல்களால்
குத்தியுள்ளார். பின்னர் சமையலறைக்குப் போயுள்ளார். அங்கு கத்தியை
எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குப் போயிருக்கிறார். அங்கு தனது கழுத்தை
கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தடயவியல்
நிபுணர்களின் அறிக்கை கூறுகிறது.
சான்ட்லரின் உடலில் 90 இடங்களில் கத்திரிக்கோல் குத்து காயம் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments