டஸ்ட்டரின் விலையை 40,000 வரை உயர்த்திய ரெனோ!

Renault Duster Price Hiked Inr 40k உற்பத்தி செலவீனம் அதிகரித்திருப்பதால் டஸ்ட்டர் எஸ்யூவி விலையை ரூ.40,000 வரை உயர்த்தியிருக்கிறது ரினால்ட்.
அறிமுகம் செய்யப்பட்டு இரு மாதங்களுக்கு உள்ளாகவே டஸ்ட்டர் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மாடல் விலை 30,000 ரூபாயும், டீசல் மாடல் விலை 40,000 ரூபாயும் உயர்ந்திருக்கிறது.

அக்டோபர் 1ந் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என ரினால்ட் தெரிவித்துள்ளது.
உற்பத்தி செலவீனம் அதிகரித்தது மட்டுமின்றி டீசல் விலை உயர்வால் டீலர்களுக்கு அனுப்புவதற்கான போக்குவரத்து செலவீனமும் அதிகரித்துள்ளதாலேயே டஸ்ட்டர் விலையை உயர்த்த வேண்டியதாயிற்று என்று ரினால்ட் கூறியிருக்கிறது.
இந்த விலை உயர்வை அடுத்து பேஸ் வேரியண்ட் பெட்ரோல் மாடல் விலை ரூ.7.49 லட்சமாகவும், பேஸ் வேரியண்ட் டீசல் மாடல் விலை ரூ.8.39 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.
ஹோண்டா, மாருதி, ஜெனரல் மோட்டார்சை தொடர்ந்து ரினால்ட் நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments