கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சரியாக மூடப்படாத 20 அடி ஆள்துளை கிணற்றில்
தவறி விழுந்த 3 வயது சிறுவன் 5 மணிநேர போராட்டத்திற்கு பின் உயிருடன்
மீட்கப்பட்டான். அவனை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். கிருஷ்ணகிரி
மாவட்டம் தளி, அடுத்து தேன்கனிகோட்டை அருகே ஜவலகிரி கிராமத்தில்,
இப்பகுதியைச் சேர்ந்தவர் ஒரு விவசாயி 600 அடி ஆழத்தில் போர்வெல் போட
முடிவு செய்தார். அப்பகுதியில் பாறைகள் அதிகளவில் இருந்ததால் 20 அடி
ஆழத்தில் மட்டுமே போர் போட முடிந்தது. இதனால் பணிகள் பாதியில்
நிறுத்தப்பட்டன.
குழியையும் சரிவர மூடாமல் சணல் சாக்கினால் அரைகுறையாக மூடி வைத்துள்ளார். இன்று காலை அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த குணா (3) என்ற சிறுவன் கிணற்றிற்குள் தவறி விழுந்தான். அவனை மீட்க தீயணைப்புத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஜே.பி.சி .இயந்திரம் மூலம் தோண்டும் பணிநடந்தது. பின்னர் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் குணா உயிருடன் மீட்கப்பட்டான். தற்போது ஒசூர் மருத்துவமனையில் அவனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

Comments