நோக்கியா களமிறக்கும் 2 அட்டகாசமான குறைந்த விலை போன்கள்

Nokia Asha 308 and 309நோக்கியா மேலும் இரண்டு புதிய போன்களை தனது ஆஷா போன்கள் வரிசையில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த போன்களுக்கு ஆஷா 308 மற்றும் ஆஷா 309 ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.
இந்த இரண்டு போன்களும் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் கீறல் விழாத வசதியுடன் 3 இன்ச் அளவில் கப்பாசிட்டிவ் டிஸ்ப்ளேகளைக் கொண்டுள்ளன. மேலும் இந்த போன்கல் 2எம்பி கேமராக்களையும் கொண்டிருக்கின்றன.

அதோடு இந்த போன்கள் நோக்கியா எக்ஸ்ப்ரஸ் ப்ரவுசர் கொண்டிருப்பதால் இந்த போன்களில் இணைய தளங்களில் புகுந்து விளையாட முடியும். மேலும் இந்த போன்கள் ஏராளமான அப்ளிகேசன்களுடன் வருகின்றன.
குறிப்பாக சமூக வளைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ்அப் மெசஞ்சர் போன்ற அப்ளிகேசன்களை இந்த போன்களில் பார்க்கலாம். அதோடு நோக்கியாவின் மேப்ஸ் 2.0வும் இந்த போன்களில் உள்ளன.
பொழுதுபோக்கு அம்சங்களுக்காக இந்த போன்களில் டெட்ரிஸ், பிபா 2012 மற்றும் நீட் பார் ஸ்பீட் உள்பட 40 இஎ கேம்களையும் நோக்கியா வழங்குகிறது. மேலும் நோக்கியா ஸ்டோரிலிருந்து 22 கேம்களையும் இந்த போன்களில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்த இரண்டு போன்களுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் ஆஷா 308ல் டூவல் சிம் வசதி உண்டு. ஆனால் ஆஷா 309ல் இந்த வசதி இல்லை. இந்த போன்கள் 99 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,292க்கு விற்கப்படும் என்று தெரிகிறது.

Comments