குடிநீர் பற்றாக்குறையை தீர்த்து வைக்க ஒரு அரசோ, முதல்வரோ இல்லையே: கருணாநிதி

 Admk Government Doesn T Care About Water Scarcity Issue
சென்னை: குடிநீர் பற்றாக்குறையைத் தீர்த்து வைக்க இங்கு ஒரு முதல்வர் இல்லையே என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை நகரில் திமுக ஆட்சியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் உடனடியாக அது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் விவாதித்து இரவோடு இரவாக கை பம்புகளை அமைத்தும், தனியார் லாரிகள் மூலமாகவும்
புறநகர் பகுதிகளில் இருந்து குடிநீரைக் கொண்டு வந்தும் விநியோகப்பட்டது.

ஆனால் இப்போது குடிநீர் ஒரு குடம் ரூ.5க்கு விற்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. தனியார் டிராக்டர், லாரிகள் மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீர் ரூ.5 வரை விற்கப்படுவதால் அதனைப் பெற முடியாதவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவோ, கலந்து பேசி விரைந்து முடிவெடுக்கவோ ஒரு அரசோ, ஒரு முதல்வரோ இங்கு இல்லை.

இப்போது மேட்டூர் அணை திறந்தது தொடர்பாக டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைவதற்கு எதுவுமில்லை. சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சார்ந்த மக்களின் குடிநீர்த் தேவைக்காக மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் வினாடிக்கு 400 கன அடி வீதம் 10 நாள்களுக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிட அரசு முன்வந்துள்ளது. இந்த நீர் டெல்டா விவசாயத்துக்காக இல்லை.

மின் வாரியத்துக்கு 4,000 உதவியாளர்கள் நேரடி நியமனம் செய்யப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். நல்ல வேட்டை தான். 1,000 மெகாவாட் திறன் கொண்ட வள்ளூர் அனல் மின் திட்டம், 1,200 மெகாவாட் திறன் கொண்ட வட சென்னை அனல் மின் திட்டம், 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டம் ஆகியவற்றின் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிட்டதை அடுத்து விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளன என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Comments