“வாய்மூடி மவுனி மன்மோகன் ” - டைம் பத்திரிக்கை வெளுத்து வாங்கியது !

நியூயார்க்: இந்திய பிரதமராக இருக்கும் மன்மோகன்சிங் எந்தவொரு நிலையிலும் சுதந்திரமாக செயல்பட முடியாமல் ஒரு நிழல் பிரதமராக மட்டுமே இருக்கிறார் என்றும், அவர் அமைச்சரவையில் ஊழல்களை கட்டுப்படுத்த முடியாமல் பெரும் சிரமப்பட்டார் என்றும், ஒரு வாய்மூடி மவுனியாக இருக்கிறார் என்றும் அமெரிக்க பிரபல பத்திரிக்கை டைம் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்த பத்திரிக்கையின் ராப்பர் கவேரஜாக ஆசிய பதிப்பில் வெளிப்டுத்தும் இந்த கட்டுரை ஐக்கிய முற்கேபாக்கு கூட்டணிக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. மேன் ஆப் ஷாடோ என்ற அந்த கட்டுரையில் பிரதமரை பற்றி விமர்சித்திருப்பதாவது:

ஊழல் அமைச்சர்களை கட்டுப்படுத்த முடியவில்லை: பிரதமர் என்ற நிலையில் சுதந்திரமாக செயல்பட முடியாத தலைவராக மன்மோகன்சிங் இருந்து வருகிறார். இவர் எந்தவொரு சாதனையும் படைக்க முடியாதவராக உள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வரவில்லை. வாய்மூடி மவுனியாக இருப்பது அவருக்கு பெரும் சக்தியாக இருந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் அவரது சக அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளால் அவர் எதுவும் நடவடிக்கை எடுக்காமல், வாய்மூடி மவுனியாக இருந்து வந்திருக்கிறார். மத்திய அமைச்சர்களை அவரால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இந்த அமைதி எடுபடாமல் போனது. புரையோடிப்போன ஊழல்கள் ,பணவீக்கம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் வெறுத்துப்போன வாக்காளர்கள் அவரது தலைமையிலான அரசு மீது நம்பிக்கையை இழந்து நிற்கின்றனர் .

தாராளமயமாக்கல் கொள்கையினால் சிதறுண்டு இறுகிக்கிடக்கும் இந்நேரத்தில் அவர் நிதி அமைச்சக பொறுப்பையும் விருப்பம் இல்லாமல் பெற்று இருக்கிறார். இதனை எவ்வாறு சீர்தூக்கி நிறுத்துவார் என்று கேள்வி எழுந்துள்ளது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. பணவீக்கம் நாட்டை அச்சுறுத்தி வருகிறது. விலைவாசி உயர்வும் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக உள்ளது. இவற்றினை கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்த பிரதமர் மன்மோகன்சிங் ஒரு நிழல் பிரதமராக உள்ளார். சுதந்திரமான முடிவினை அவரால் எடுக்கமுடியவில்லை. விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலித்து வரும் நிலையில் டைம் பத்திரிக்கையின் இந்த கட்டுரை காங் வட்டாரத்திற்கு பெருமுஞூ தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments