களம் இறங்குவாரா கலாம்?: ஃபேஸ்புக்கில் கொட்டோ கொட்டோவென கொட்டும் ஆதரவு

 Mamata Banerjee Takes Facebook Apj Abdul Kalam டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில் தனி ஆளாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி அப்துல்கலாமை நிறுத்தப் போவதாக அறிவித்து இருப்பதுடன் ஃபேஸ்புக் மூலம் தொடர்ந்தும் கலாமுக்கு அவர் ஆதரவு திரட்டி வருகிறார்.

மமதா பானர்ஜியின் ஃபேஸ்புக்கில் நேற்றே இதுபற்றி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஒவ்வொரு குடிமகனும் தங்களது எம்.எல்.ஏ
மற்றும் எம்.பி.க்களிடம் கலாமுக்கு வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

மமதாவின் இந்த கருத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு. ஆயிரக்கணக்கான கமெண்டுகள், லைக்குகள் என மமதாவின் ஃபேஸ்புக் கலாம் ஆதரவு கருத்துகளால் நிரம்பி இருக்கிறது.

அப்துல்கலாமும்கூட செம அப்டேட்டில்தான் இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு, தம்மை பலரும் தொடர்பு கொண்டு மீண்டும் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று வலியுறுத்துவதாக லக்னோவில் கூறியதை ஃபேஸ்புக்கில் போட்டிருக்கிறார். அனேகமாக பொதுமக்களின் கருத்தை அறியும் வகையில்தான் அவர் போட்டிருக்கக் கூடும். அதற்கும் ஏகப்பட்ட ஆதரவு. 6 ஆயிரத்துக்கும் மேலான கமெண்டுகள் குவிந்து கிடக்கின்றன.

பெரும்பாலான கமெண்டுகள் கலாம் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டாக வேண்டும் என்பதையே வலியுறுத்தி இருக்கிறது.

கமெண்டுகளின் விருப்பங்களை ஏற்று களம் காண வருவாரா அப்துல்கலாம்?

Comments