குடியரசுத் தலைவர் வேட்பாளர்ரா?: பட்டும் படாமல் பேசும் கலாம்!
சென்னை: நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார்? என்ற
கேள்விக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயராக அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
அப்துல்கலாமையே
மீண்டும் குடியரசுத் தலைவராக்கலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.
வீரமணி அண்மையில் கூறியிருந்தார். இந்தக் கருத்தில் இருந்து தாம்
மாறுபடவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதியும் கூறியிருந்தார்.
அப்துல்கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க ஒரு லாபியும் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற விழாவிற்கு வந்த
அப்துல்கலாமிடம் குடியரசுத் தலைவர் வேட்பாளராக உங்கள் பெயர் அடிபடுகிறதே?
என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு கண்டும் காணாமலும் பாணியில்
"பத்திரிகைகளில் தான் பார்க்கிறேன்... பொறுத்துப் பார்க்கலாம்" என்று கலாம்
பதில் அளித்திருக்கிறார்.
Comments