பிரணாப்பை பாஜக கூட்டணி ஆதரிக்கக் கூடாது.. ஆதரிச்சா நானும் போட்டியிடுவேன்: ஜெத்மலானி

 Will Contest Prez Poll If Bjp Backs Pranab Jethmalani
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நிறுத்தியுள்ள பிரணாப் முகர்ஜியை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரிக்கக் கூடாது என்று பாஜக எம்.பியான ராம்ஜெத்மலானி வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடு செல்லும் முன்பாக செய்தியாளர்களிடம் தொலைபேசி மூலம் பேசிய ஜெத்மலானி, பிரணாப் முகர்ஜி என்னோட நண்பர்தான். அவருக்கு
சில பாராட்டுக்குரிய தகுதிகள் இருக்கின்றனதான்..ஆனால் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் சொத்துகளை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் அவர் அக்கறை செலுத்தவில்லை என்றார்.

மேலும் பிரணாப் முகர்ஜியை ஒருமித்த வேட்பாளராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்கக் கூடாது. அப்படி ஏற்றுக் கொண்டால் நானே போட்டியிடுவேன் என்றார் அவர். ராம்ஜெத்மலானிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முன் அனுபவம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments