புதுக்கோட்டையில் டெபாசிட் வாங்க உழைத்தவர்களுக்கு விஜயகாந்த் மோதிரம் வழங்கி மரியாதை!

சென்னை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தேமுதிகவுக்காக தீவிரமாக உழைத்த கட்சிக்காரர்களுக்கு தங்க மோதிரம் வழங்கி கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று கெளரவித்தார்.

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தேமுதிக போட்டியிட்டு வரலாறு காணாத வகையில் 30,500 வாக்குகள் பெற்றது.
இது அக்கட்சியினருக்கே அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதை எதிர்பார்க்கவில்லை என்று கட்சித் தலைவர் விஜயகாந்த்தே கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை தேமுதிக நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து பரிசளித்துக் கெளரவித்தார் விஜயகாந்த். அவர்களுக்கு தங்க மோதிரம் அணிவித்தார் விஜயகாந்த்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக அனைத்து மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும் விஜயகாந்த் பங்கேற்றார்.

தேமுதிக தொடங்கிய பின்னர் அது பங்கேற்ற எந்த ஒரு இடைத் தேர்தலிலும் டெபாசிட்டை திரும்ப வாங்கியதே இல்லை அக்கட்சி. ஆனால் புதுக்கோட்டை இடைத் தேர்தலில்தான் முதல் முறையாக அக்கட்சி வேட்பாளருக்கு டெபாசிட் கிடைத்துள்ளது. திமுகவின் தேர்தல் புறக்கணிப்பே இதற்கு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments