குடியரசுத் தலைவர் தேர்தல்: அத்வானியிடம் ஆதரவு கோரினார் சங்மா
அதிமுகவின் ஜெயலலிதா, பிஜூ ஜனதா தளத்தின்
நவீன்பட்நாயக் ஆகியோர் பி.ஏ.சங்மாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்
நிறுத்தியுள்ளனர். சங்மாவும் தம்மையே மற்ற கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்
என்று பல்வேறு கட்சித் தலைவர்களிடமும் வலியுறுத்தி வருகிறார். ஏற்கெனவே
சுஸ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, பிரகாஷ் காரத், நிதிஷ் குமார், டி. ராஜா,
முலாயம்சிங் ஆகியோரை நேரில் சந்தித்து தமக்கு ஆதரவளிக்கக்
கோரியிருக்கிறார்.
இந்நிலையில் எல்.கே. அத்வானியையும் சங்மா
சந்தித்து தமக்கு ஆதரவு கோரியிருக்கிறார். நாட்டின் உயரிய பதவியான
குடியரசுத் தலைவர் பதவிக்கு நாடு விடுதலை அடைந்த பிறகு எந்த ஒரு பழங்குடி
இனத்தலைவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால் தம்மை தேர்ந்தெடுக்க
ஆதரவளிக்க வேண்டும் என்பது சங்மாவின் கோரிக்கை.
Comments