டிசம்பரில் சென்னை- நெல்லை இடையே மின்ரயில் பாதை
திருநெல்வேலி: திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வரும் டிசம்பரில் மின்சார பாதையில் ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து
நெல்லை, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் ஆகிய வழித்தடங்களில்
மின்மயமாக்கும் பணிகள் சுமார் ரூ 1 கோடியே 75 லட்சம் செலவில் நடந்து
வருகிறது. இதில் மின்கம்பங்கள் நடும் பணிகள் முடிந்து விட்டன.
மதுரையிலிருந்து மணியாச்சி வரும் மின்கம்பங்கள் நடும் பணிகள் நடந்து
வருகின்றன. அடுத்தப்படியாக மணியாச்சியிலிருந்து நெல்லைக்கும்,
தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கும் மின் கம்பம் மற்றும் வயர்
பொருத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் அனைத்தும் 90 சதவீதம்
முடிவடந்து விட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து
இந்த வழித்தடத்தில் மணியாச்சி, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட
பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் இந்தியன் ஆயி்ல் கார்ப்பரேசன் பகுதியில் துணை மின் நிலையம்
அமைக்கப்பட உள்ளது. இந்த துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டவுடன் மின்சார
ரயில் சேவை துவங்கும்.
Comments