யாரை ஆதரிப்பது என்பதில் குழப்பம்- முடிவெடுக்காமல் முடிவடைந்த என்.டி.ஏ. கூட்டம்
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதா? இல்லையா?
என்பது குறித்து முடிவெடுக்கக் கூடிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்
கூட்டணியின் கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
டெல்லியில்
அத்வானியின் இல்லத்தில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்
பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிவசேனா
பங்கேற்கவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப்
முகர்ஜியை ஆதரிப்பதா? அல்லது கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதா?
அல்லது அதிமுக, பிஜூ ஜனதா தள வேட்பாளர் சங்மாவை ஆதரிப்பதா? என்று குறித்து
விவாதிக்கப்பட்டது.
பின்னர் முடிவு எதுவும் மேற்கொள்ளப்படாமலேயே
கூட்டம் முடிவடைந்தது. கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய
ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், பாஜக மற்று கூட்டணி கட்சிகள் ஆளும்
மாநில முதல்வர்களுடன் அக்கட்சி ஆலோசனை நடத்திய பிற்கு மீண்டும் கூட்டணியின்
ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றார். மேலும் இதர அரசியல் கட்சித்
தலைவர்களுடனும் அத்வானி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் சரத் யாதவ் கூறினார்.
இருப்பினும்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பதாலேயே
முடிவெடுக்காமல் டெல்லி கூட்டம் முடிவடைந்ததாகவே கூறப்படுகிறது.
Comments