புதிய ஸ்பைஸ் டியூவல் சிம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!
ஸ்பைஸ் நிறுவனம் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது.
பொதுவாக ஸ்பைஸ் நிறுவனத்தின் மூலம் நிறைய குறைந்த விலை கொண்ட மொபைல்கள்
வெளியாகி உள்ளது. இந்த முறை எம்ஐ-425 என்ற புதிய ஸ்மார்ட்போனை வழங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தினை வழங்கும் என்பது
கேட்ஜட்ஸ் உலகில் ஒரு மகிழ்ச்சியான செய்தி தான். ஆன்ட்ராய்டு வி2.3
ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 1
ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரினை கொண்டது.
இயங்குதளத்திற்கு பிறகு வாடிக்கையாளர்கள் கவனம் செலுத்துவது கேமரா தான்.
அந்த வகையில் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டது.
அதோடு 0.3 விஜிஏ முகப்பு கேமராவினையும் வழங்கும்.
டியூவல் கேமரா மட்டும் அல்லாமல் இதில் டியூவல் சிம் வசதிக்கு சப்போர்ட்
செய்யும் தொழில் நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள 5
மெகா பிக்ஸல் கேமரா 2592 X 1944 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.
140 எம்பி இன்டர்னல் மெமரி வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 32 ஜிபி
வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும்.
இதன் புளூடூத் வசதியின் மூலம் தகவல்களை பரிமாறி கொள்ளலாம். இந்த
ஸ்மார்ட்போனில் வைபை மூலம் இன்டர்நெட் வசதியினை வழங்கும். 3ஜி நெட்வொர்க்
வசதியினையும் எம்ஐ-425 ஸ்மார்ட்போனில் பெறலாம்.
எப்எம் ரேடியோ, மியூசிக் ப்ளேயர் போன்ற தொழில் நுட்ப வசதிகளுக்கு
சப்போர்ட் செய்ய இதில் 2,000 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியும்
கொடுக்கப்பட்டுள்ளது. உயர்ந்த தொழில் நுட்பத்தினை வழங்கும் இந்த மொபைல்
ரூ.10,000 விலையினை கொண்டது.
Comments