டைரக்டர், எடிட்டர், நடிகர் ஆகனும்னு ஆசைப்படுபவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள்

Admissions Open At Mgr Film Tv Institute சென்னை: எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மூன்றாண்டு கால பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல், படம் பதனிடுதல் படத்தொகுப்பு ஆகிய நான்கு பிரிவுகளிலும்

பட்டப் படிப்பில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இயக்குதல் பிரிவிலும், மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல், படம் பதனிடுதல் படத்தொகுப்பு ஆகிய நான்கு பிரிவுகளிலும்

பட்டப் படிப்பில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இயக்குதல் பிரிவிலும் சேரலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை Principal, MGR., Government Film and Television Institute, Tharamani, Chennai-600 113, எனும் பெயரில் ரூ.200- க்கான வங்கி வரைவோலையையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சாதி சான்றின் ஜெராக்ஸ் நகலுடன் ரூ.60-க்கான வங்கி வரைவோலையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும்.

சென்னையில் வசிப்பவர்கள், ரூ.30-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய 2 கவர்கள் ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறையுடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விண்ணப்படிவம், தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in எனும் இணையதளம் மூலம் பெற்று, பூர்த்தி செய்தும் அனுப்பிவைக்கலாம்.

விண்ணப்பஙகள் முறையாக பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணத்துடன், அரசு தொலைக்காட்சி நிலையம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி ஜூன்- 15 ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Comments