கருணாநிதிக்கு வயசு 89: பெங்களூரில் இருந்து தொலைபேசியில் ரஜினிகாந்த் வாழ்த்து

Rajinikanth Wishes Karunanidhi On His 89 Birthday பெங்களூர்: திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரில் இருந்து தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 89வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திமுக தொண்டர்கள் அவரது வீட்டுக்கு முன்பு கூடி மேள, தாளங்கள் முழங்க வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழகம் முழுவதும் அவரது பிறந்தநாளை திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

மத்திய அமைசச்ர் நாராயணசாமி கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவி்த்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பெங்களூரில் உள்ளார். அவர் அங்கிருந்து கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Comments