இந்தியாவின் இணையற்ற தலைவர் அண்ணல் அம்பேத்கர் - முதல் பத்து பட்டியலில் ரஜினி!

Dr Ambetkar Leads Who Greatest Indian After Gandhi
காந்திக்குப் பின் மிகச் சிறந்த இந்தியர் யார் என்ற கருத்துக் கணிப்பில், பாபாசாகேப் டாக்டர் பிஆர் அம்பேத்கர் 7 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
முதல் பத்து மிகச் சிறந்த இந்தியர் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 8வது இடம் கிடத்துள்ளது.

ஹிஸ்டரி, சிஎன்என்-ஐபிஎன் சேனல்கள் இணைந்து ஆன்லைனிலும், நேரடி கள ஆய்வு மூலமும் நடத்தும் இந்த சர்வே நாடு முழுவதும் இப்போது பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

நவீன இந்தியாவில் மகாத்மா என்றழைக்கப்படும் காந்திக்குப் பிறகு, அவருக்கு நிகரான தலைவர் யார் என்ற வாக்கெடுப்பில், அண்ணல் டாக்டர் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல், அன்னை தெரசா, ஜவஹர்லால் நேரு, டாக்டர் அப்துல்கலாம், ரஜினிகாந்த் உள்பட 50 பேர் கொண்ட பட்டியல் தரப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஆன்லைனில் பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி வாக்களிக்கும் முறையிலும், அடுத்தது நேரடி கள ஆய்வு மூலமும் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

ஒருவர் 10 தலைவர்களை வரிசைப்படுத்தி தேர்ந்தெடுக்கலாம். ஒரு முறைக்கு மேல் வாக்களிக்க முடியாது.
Dr Ambetkar leads in 'Who is the greatest Indian after Gandhi'poll!

ஆன்லைன் வாக்கெடுப்பில் இதுவரை 883294 வாக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கருக்கு மட்டும் 708414 வாக்குகள்!
அண்ணல் அம்பேத்கருக்கு அடுத்து கன்ஷிராமுக்கு 29731 பேர் வாக்களித்துள்ளனர்.

உத்தரபிரதேசம் மற்றும் மராட்டியத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வாக்கெடுப்பில் அதிகம் பங்கேற்றிருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தாலும், அண்ணல் அம்பேத்கரின் முக்கியத்துவம் முன்பை விட இப்போது அதிகம் உணரப்பட்டிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல் பத்துப் பேர் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. அடுத்த இடம் ஏ ஆர் ரஹ்மானுக்கு. அமிதாப் 10வது இடத்தில் உள்ளார்.

வாக்களிக்க இன்னும் அவகாசம் இருப்பதால் இந்த பட்டியலில் மாற்றங்கள் வரலாம். ஆனால் முதல் இடத்துக்கு மட்டும் எந்த மாறுதலும் வராது. காரணம் பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் ஒருவர் மட்டுமே லட்சங்களில் வாக்குகளைப் பெற்றுள்ளார். மற்றவர்களுக்கு சில ஆயிரங்கள்தான்.

மகாத்மா காந்திக்குப் பிறகு சிறந்த இந்தியர் - முதல் பத்து:
1 டாக்டர் அம்பேத்கர்  723055
2 கன்ஷிராம்                30361
3 வாஜ்பாய்                  16267
4 அப்துல் கலாம்          12662
5 சச்சின் டெண்டுல்கர் 10014
6 அன்னை தெரசா        8110
7 வல்லபாய் படேல்      7624
8 ரஜினிகாந்த்                6897
9 ஏஆர் ரஹ்மான்           5071
10 அமிதாப் பச்சன்         4525

Comments