5 இஞ்ச் திரையில் புதிய ஸ்பைஸ் ஸ்மார்ட்போன்!
இந்திய நிறுவனமான ஸ்பைஸ் தனது தொழில் நுட்ப திறமையில் முன்னேறி கொண்டே
வருகிறது. இந்நிறுவனம் இன்று 2 ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.
ஸ்பைஸ் ஸ்டெல்லர் ஹாரிஸன் எம்ஐ-500 மற்றும் ஸ்பைஸ் ஸ்டெல்லர் க்ரேஸ்
எம்ஐ-355 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை உருவாக்கி உள்ளது. இந்த இரண்டு
ஸ்மார்ட்போன்களுமே டியூவல் சிம் தொழில் நுட்ப வதியினை கொண்டது.
இதில் ஸ்பைஸ் ஸ்டெல்லர் ஹாரிஸன் எம்ஐ-500 என்ற இந்த ஸ்மார்ட்போன்
ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும்.
தொடுதிரை வசதி கொண்ட இந்த ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ்
வேகத்தில் இயங்கும் பிராசஸரையும் கொண்டது.
ஸ்பைஸ் ஸ்டெல்லர் க்ரேஸ் எம்ஐ-355 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3
ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினையும் கொடுக்கும். இந்த
ஸ்மார்ட்போன், ஐசிஎஸ் அப்டேஷன் மட்டும் அல்லாமல் இன்னும் பல சிறந்த தொழில்
நுட்பங்களையும் வழங்கும்.
எம்ஐ-500 ஸ்மார்ட்போனைவிட எம்ஐ-355 ஸ்மார்ட்போனின் திரை வசதி சற்று
குறைவு தான். இந்த ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் தொடுதிரை வசதியினை கொண்டது.
எம்ஐ-500 ஸ்மார்ட்போன் டியூவல் கேமராவினை கொண்டது. இதில் 5 மெகா பிக்ஸல்
கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் வழங்கும். எம்ஐ-355
ஸ்மார்ட்போனிலும் 5 மெகா பிக்ஸல் மற்றும் 0.3 மெகா பிக்ஸல் கேமராவும்
கொடுக்கப்பட்டுள்ளது.
எம்ஐ-500 ஸ்மார்ட்போன் 2,150 எம்ஏஎச் பேட்டரியினையும், எம்ஐ-355
ஸ்மார்ட்போன் 1,420 எம்ஏஎச் பேட்டரியினையும் கொண்டது. உயர்ந்த தொழில்
நுட்பத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலையினையும் பார்ப்போம்.
ஸ்பைஸ் ஸ்டெல்லர் ஹாரிஸன் எம்ஐ-500 ஸ்மார்ட்போன் ரூ.11,999 விலையையும்,
ஸ்பைஸ் ஸ்டெல்லர் எம்ஐ-355 ஸ்மார்ட்போன் ரூ.9,999 விலையினையும் கொண்டது.
Comments