நோபல் பரிசை 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்றார் ஆங் சாங் சூகி

 Suu Kyi Receives Nobel Peace Prize 21 Years Late
ஆஸ்லோ: மியான்மரில் ஜனநாயகத்துக்குப் போராட்டம் நடத்தி வரும் ஆங் சாங் சூகி 21 ஆண்டுகளுக்குப் பிறகு நோபல் பரிசை ஏற்றுக் கொண்டு உரையாற்றினார்.

மியான்மரில் ஜனநாயகத்துக்காகப் போராடியதால் 15 ஆண்டுகளுக்கு மேலாக விட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் ஆங் சாங் சூகி. அவருக்கு 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆங் சாங் சூகியால் நேரில் சென்று நோபல் பரிசை பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது மகன்கள் கிம் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர்தான் நோபலைப் பெற்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட சூ கி, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். அதன் பின்னர் தாய்லாந்து பயணம் மேற்கொண்டிருந்தார். தற்போது ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள அவர் நார்வே சென்றார்.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சூகி நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டு உரை ஆற்றினார்.

Comments