பிரேக்கிங் நியூஸ்.. சாம்சங் கேலக்ஸி எஸ்-3 விலை விபரம் கசிந்தது!
மே மாதம் 3-ஆம் தேதி அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்
பற்றிய தகவல்களை வாடிக்கையாளர்கள் அதிக பரபரப்பாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் விலை விவரம் பற்றிய
தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.42,500
கொண்டதாக இருக்கும் என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த விலை
ஆரம்ப விலையா அல்லது 64 ஜிபி மாடலின் விலையா என்பதும் இன்னும்
அணுமானிக்கப்படவில்லை.
ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனை போல, கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனும் 16
ஜிபி, 32 ஜிபி, 64 ஜிபி என்று மூன்று மாடல்கள் கொண்டது. இந்த
ஸ்மார்ட்போனின் விலை என்னவாக இருக்கும் என்று பல கருத்துகள் வெளியாகி
வந்தன. ஆனால் இதுவரை இந்த ஸ்மார்ட்போனின் விலையை யாரும் யூகித்து கூட
பார்க்க முடியவில்லை.
ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனையும் விட
அதிக திரை வசதியையும், இன்னும் பல உயர்ந்த தொழில் நுட்பங்களையும் கொண்டதாக
இருப்பதாக தகவல் கூறுகின்றது. இதனால் நிச்சயம் விலையும் அதிகமாக தான்
இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் இப்போது கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.42,500
கொண்டதாக இருக்கும் என்று வெளியாகி உள்ள தகவல், ஓரளவு வாடிக்கையாளர்களுக்கு
உதவியாக இருக்கும். ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விலை விரத்தினை சாம்சங்
இந்தியா நிறுவனம் வெளியிட மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
4.8 இஞ்ச் திரை, 8 மெகா பிக்ஸல் கேமரா, 4ஜி, ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம்
சான்ட்விச் என்று உயர்ந்த தொழில் நுட்பங்களை அடுத்து அடுத்து அடுக்கி
வைத்திருக்கிறது சாம்சங் கேலக்ஸி எஸ்-3.
வாடிக்கையாளர்களுக்கு இப்படிப்பட்ட தொழில் நுட்பங்களை அள்ளி கொடுக்க
காத்திருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் விலையை தெரிந்து
கொள்ளவும் கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
Comments