நாங்கள் போட்டியிடுவதை அதிமுகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை- தேமுதிக
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தேமுதிக போட்டியிடுவதை அதிமுகவினரால்
தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் சங்கரன்கோவிலை விட அதிக வாக்குகள்
பெற்று புதுக்கோட்டையில் நாங்கள் வென்று காட்டுவோம் என்று தேமுதிகவின்
மாநிலத் துணைச் செயலாளர் ஆஸ்டின் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேனை அறிமுகம் செய்து வைத்து நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்டின் பேசுகையில்,
தேர்தல் களத்தில் தேமுதிக போட்டியிடுவதை அதிமுகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதிமுக அரசின் குறைகளை மக்களிடம் எடுத்துக் கூறி சுமார் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வெற்றி பெறும். இந்தத் தேர்தல், கட்சியின் எதிர்காலத்துக்கு முக்கியமானதாகும்.
அதிமுக அரசு ஓராண்டில் மக்களுக்கு கொடுத்ததைவிட, பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணம் உயர்வு ஆகியவற்றின் மூலம் மக்களிடமிருந்து பெற்றதுதான் அதிகம் என்றார் அவர்.

Comments