சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நித்யானதாவை கைது செய்ய வேண்டும்: அர்ஜுன் சம்பத்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு
வரும் நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித்
தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மதுரை ஆதீனத்தை மீட்பதற்காக 27-ந் தேதி நெல்லையில் பேரணி நடத்த அனுமதி பெற்றுள்ளோம். ஆனால் நித்யானந்தாவோ போட்டி பேரணி நடத்துவேன் என்கிறார்.
நெல்லை பேரணியின் போது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு நித்யானந்தாதான். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நித்யானந்தா தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மதுரை ஆதீனம் தலைமை பொறுப்பு ஏற்றால் பாலியல் வழக்கில் இருந்து விடுதலை பெற முயற்சிக்க முடியும் என்பதற்காகவே பல கோடி ரூபாய் கொடுத்து மதுரை ஆதீனம் பதவியை கைப்பற்றியுள்ளார்.
மதுரை ஆதீனத்தை மீட்க சென்ற சிவனடியார்கள் மீது காலணிகளை வீசியுள்ளனர். இந்த விவகாரத்தில் நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்து உடனே கைது செய்ய வேண்டும் என்றார் அவர்.

Comments