ஜெயலலிதா நாளை கொடநாடு பயணம்: சசியை அழைத்துச் செல்வாரா?

 Jayalalithaa Fly Off Kodanad Tomorrow
சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைவதையடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக நாளை கொடநாடு செல்கிறார்.

தமிழக பேரவைக் கூட்டம் கடந்த மார்ச் 26ல் தொடங்கியது. 1 மாதம் நடைபெற்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து ஜெயலலிதா கொடநாடு சென்று ஓய்வு எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக நாளை விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொடநாடு செல்கிறார். பின்னர் வெள்ளிக்கிழமையன்று உதகை மலர் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் சில நாட்கள் கொடநாட்டில் தங்குகிறர்.

வரும் 23ம் தேதி சென்னை திரும்பும் முதல்வர் ஜெயலலிதா அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற உள்ள தொழிற்சங்கத்தினருக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் ஜூன் முதல் வாரத்தில் புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்துக்காக செல்ல திட்டமிட்டுள்ளார்.

ஜெயலலிதாவுடன் சசிகலாவும் செல்வாரா என்பது தெரியவில்லை.

Comments