பாகிஸ்தானில் டுவிட்டருக்கு தடை

இஸ்லாமாபாத்: மத வழிபாடு தொடர்பாக அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்காக பாகிஸ்தானில் டுவிட்டர் இணையதளத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவதூறு கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அந்த இணையதளத்திற்கு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக டுவிட்டர் இணையதள நிர்வாகத்தை பல முறை தொடர்பு கொண்ட போதும், பதில் கிடைக்காததால் தடை விதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது. தடை காரணமாக இன்று மதியம் முதல் கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் டுவிட்டர் இணையதளத்தை யாராலும் பயன்படுத்த முடியவில்லை.

Comments