எனக்கு எதிராக கருத்து தெரிவித்த ஆதீனங்கள் மீது வழக்கு தொடரப்படும்: நித்யானந்தா
மதுரை: தான் மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த
ஆதீனங்கள் மீது வழக்கு தொடரப்போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டது குறித்து சில ஆதீனங்கள் கருத்து தெரிவித்ததை எதிர்த்து போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். அதனால் நாங்கள் ஆதீனங்கள் மீது வழக்கு தொடரவிருக்கிறோம்.
மதுரை ஆதீன பாதுகாப்பு பேரவை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 53 இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அந்த இயக்கங்களின் கீழ் 4,300 சங்கங்கள் உள்ளன. மதுரை ஆதீன பாதுகாப்பு பேரவையின் தலைவராக அசோக் சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தேசிய தலைவர்) நியமிகப்படவிருக்கிறார். தலைவராக இருக்க அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
மதுரை ஆதீனத்திற்கு எதிராக நடந்த கூட்டத்திற்கு தொண்டை மண்டல ஆதீனம் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவரது கையெழுத்துள்ள அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தொண்டை மண்டல ஆதீனம் எங்களுக்கு தான் ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது கையெழுத்தை யாரோ போலியாக போட்டுள்ளனர். கையெழுத்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Comments