சரத் பொன்சேகாவை விடுவிக்க அதிபர் ராஜபக்சே கையொப்பம்
கொழும்பு:இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்க, அதிபர்
ராஜபக்ஷே கையெழுத்திட்டுள்ளார்.இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டை
முடிந்த பிறகு, இந்த வெற்றிக்கு அதிபர் ராஜபக்ஷேவும், சரத் பொன்சேகாவும்
உரிமை கொண்டாடினர். இதன் எதிரொலியாக, 2010ல் நடந்த தேர்தலில், அதிபர்
ராஜபக்ஷேவை எதிர்த்து சரத் பொன்சேகா போட்டியிட்டு தோல்வியடைந்தார். அரசியல்
எதிரியாகிவிட்ட சரத் பொன்சேகா மீது, ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள்
சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், பொன்சேகாவின் மனைவி
அனோமா, ராஜபக்ஷேவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து ஐகோர்ட்,
பொன்சேகாவுக்கு கடந்த வாரம் ஜாமின் வழங்கியது.சரத் பொன்சேகாவை விடுதலை
செய்யும் ஆவணங்களில், அதிபர் ராஜபக்ஷே நேற்று கையெழுத்திட்டார்.
இதையடுத்து, சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, நேற்று இரவு அதிபர் ராஜபக்ஷே கத்தார் நாட்டுக்கு புறப்பட்டுச்
சென்றார்.
Comments