அதிமுக எங்களை ஆதரிக்கிறது.... போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறது..: நித்யானந்தா

 Aiadmk Will Support Me Nithyananda திருவாரூர்: மதுரை ஆதீன விவகாரத்தில் ஆளும் அதிமுக எங்களை ஆதரிக்கிறது.. அதனால்தான் போகும் இடம் எல்லாம் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது என்று நித்யானந்தா கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கச்சனத்தில் உள்ள ஆதீனத்துக்குச் சொந்தமான கோயிலைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில் இருக்கும் கச்சனத்தில் மருத்துவமனை ஒன்றும் மேல்நிலைப் பள்ளி ஒன்றும் ஏற்படுத்தப்படும். இங்குள்ள ஆதீன சொத்திலிருந்து கிடைக்கும் வருவாய் முழுவதும் இப்பகுதிக்கே செலவிடப்படும்.

என்னை பற்றி அவதூறாக செய்தி பரப்புகிறவர்களுக்கு பொறுமையுடன் பதில் அளித்து வருகிறேன். சவால் மட்டுமே விட்டுள்ளேன். யாரையும் எதிர்க்கவில்லை. ரூ.5 கோடி கொடுத்து மதுரை ஆதீனத்தை விலைக்கு வாங்கி விட்டதாக தவறான தகவல்களை பரப்புகின்றேன். மதுரை ஆதீனத்தை யாரும் விலைக்கு வாங்க முடியாது. பாதகாணிக்கை தருகிறேன் என்றுதான் கூறினேன். அதுவும் சட்டப்படி உரிய அனுமதியுடன் நிதியை வழங்குவேன்.

அதிமுக ஆதரவு

தமிழக முதல்வரை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் நேரில் நிச்சயம் சந்திப்போம், எங்களை அதிமுக ஆதரிக்கிறது. அதனால்தான் போகும் இடங்களில் எல்லாம் காவல்துறையினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கின்றனர் என்றார் அவர்.

Comments