ஜனாதிபதி தேர்தல்: சென்னை வருகிறார் நவீன் பட்நாயக்.. ஜெயலலிதாவை சந்திக்கிறார்
சென்னை & புவனேஸ்வர்: ஒடிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் சென்னையில்
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மீண்டும்
ஆலோசனை நடத்தவுள்ளார்.
சென்னையில் கட்டப்படவுள்ள 'ஒடிசா பவன்' கட்டடத்தின் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வருகிறார் நவீன் பட்நாயக். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார் பட்நாயக்.
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் காங்கிரஸ் அல்லாத முதல்வர்களில் பட்நாயக், குஜராத் முதல்வர் மோடி, ஜெயலலிதா ஆகியோர் முக்கியமானவர்கள்.
இந்த மூவரும் கடந்த வாரம் தான் டெல்லியிலும் சந்தித்துப் பேசினர். அப்போது ஜனாதிபதி தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இந் நிலையில் ஜெயலலிதாவை பட்நாயக் மீண்டும் சந்தித்துப் பேசுவது முக்கியத்துவம் பெறுகிறது.

Comments