சச்சின் எம்.பி.யாக பதவியேற்பது எப்போது?
புதுடில்லி: நடந்து வரும் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள் சச்சின்
ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல
கிரிக்கெட் வீரர் சச்சின் ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். இதை
எதிர்த்து டில்லி ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் சச்சின்
எம்.பி.யாவில் தடையில்லை எனவும் இது தொடர்பாக மத்திய அரசு ஜூலை 5-ம்
தேதிக்குள் பதில அளிக்குமாறு கூறியுள்ளது.தற்போது சச்சின் ஐ.பி.எல்.
போட்டிகளில் விளையாடி வருகிறார். வரும் 27-ம் தேதி ஐ.பி.எல். போட்டிகள்
முடிகின்றன. எனினும் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைவதற்குள்ளாக அவர்
பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments