ஒபாமாவின் போட்டோவைப் பயன்படுத்தி ஏர்டெல் கனெக்ஷன் வாங்கிய குசும்பர்!

Man uses Barack Obama's photo to get new mobile phone connectionஹைதராபாத்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நபர் செல்போன் கனெக்ஷனை வாங்கிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்த அளவுக்கு இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அசட்டையாக செயல்படுகின்றன என்பதை இந்த ஒரு சம்பவம் வெளிச்சமாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் நல்கொண்டாவைச் சேர்ந்தவர் எம்.பிரசாத். 21 வயதான இவர் செல்போன் இணைப்பு வாங்க ஏர்டெல் நிறுவனத்திடம் விண்ணப்பித்தார். அப்போது ஒபாமாவின் புகைப்படத்தைக் கொடுத்துள்ளார். அவரது விண்ணப்பத்தை ஏற்று ஏர்டெல் நிறுவனமும் 9177523297 என்ற எண்ணை ஒதுக்கீடு செய்துள்ளது.

பிரசாத் கொடுத்த ஆவணத்தை முறையாகக் கூட சரிபார்க்கவில்லை ஏர்டெல் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. ஒபாமாவின் முகம் கூடவா ஏர்டெல் ஊழியர்களுக்குத் தெரியாமல் போய் விட்டது என்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

இதுகுறித்து நல்கொண்டா எஸ்.பி. நவீன்குலாத்திக்குப் புகார் போனது. இதையடுத்து அவர் டிஜிபி வரை விஷயத்தைக் கொண்டு சென்றார். அவர் இதுகுறித்து டிராய் அமைப்பிடம் புகார் தெரிவிக்கவுள்ளார்.

தற்போது இந்த இணைப்பை காவல்துறை அதிகாரிகள் துண்டித்து செயல்பட விடாமல் தடுத்து வைத்துள்ளனர்.

ஒபாமாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி செல்போன் இணைப்பு பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments