நித்தியானந்தாவை நியமித்ததில் என்ன தவறு?... கேட்கிறது மனித உரிமைகள் கழகம்!!!
மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமனம் செய்ததற்கு தமிழக மனித உரிமைகள் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
மதுரை ஆதீனத்தின் 293வது வாரிசாக நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் அறிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், ஆதரவும் அளித்து வருகிறார்கள். ஆதீனத்தின் செயலுக்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவி்த்துள்ள நிலையில் ஒரு பக்கம் ஆதரவு நிலைப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக மனித உரிமைகள் கழக மாநில தலைவர் மா. ஜெயராமன் வெளியி்ட்டுள்ள அறிக்கையில்,
திருஞானசம்பந்தரால் 1500 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட பழமை வாய்ந்த ஆதீனம் மதுரை ஆதீனம். இந்த ஆதீனத்தை வழிநடத்தவும், சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும் தற்போதைய ஆன்மீகவாதிகளில் முதன்மையானவரான ஸ்ரீ பரமஹம்ச நித்யானந்தரே தலை சிறந்தவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
எனவே, மதுரை ஆதீனத்தின் 293வது வாரிசாக சுவாமி நித்தியானந்தாவை தேர்ந்தெடுத்துள்ளதை மனித நேயத்துடன் மனநிறைவோடு வரவேற்கிறோம்.
இந்த முடிவை எடுத்த மதுரை ஆதீனமான ஸ்ரீஅருணகிரி சுவாமிகளுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வரவேற்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments